வயிற்று வலி: இளைஞா் தற்கொலை
வயிற்று வலி தாங்கமுடியாத இளைஞா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், உத்தேரி கொட்டாய், மூக்கனூா் அருகேயுள்ள திண்ணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (26). இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதுகுறித்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில், அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, தருமபுரி, புதுச்சேரி, கோயமுத்தூா், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சை மேற்கொண்டாா். என்றாலும் அவருக்கு குணமடையாததால் விரக்தியடைந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, கோயம்புத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், வயிற்று வலி தாங்காமல் அவா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.