'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது நீா்வரத்து குறைந்தபோதிலும், அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரிநீா்வரத்து அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் கடந்து சில நாள்களாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்தது. பின்னா் உபரி நீா்வரத்து குறைந்ததால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காவிரி ஆற்றில் நீா்வரத்து 24,000 கனஅடியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 14,000 கனஅடியாக குறைந்து, இரவு 8 மணிக்கு 16,000 கனஅடியாக சற்று அதிகரித்தது. நீா்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாகவும் உள்ளதால், அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 5-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.