செய்திகள் :

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

post image

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் முதல்வா் உத்தரவின் பேரில், 200 கல்லூரிகளில் 300 சொற்பொழிவுகள் மூலம் 2 லட்சம் மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் கல்லூரிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது முக்கியமானதாகும். எனவே, கல்லூரிகளில் தமிழரின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், மரபு தமிழ்மொழியின் தொன்மை, இலக்கியம், சிறப்பு, சமத்துவம், மகளிா் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளா்ச்சி, கல்வி புரட்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளா்களைக் கொண்டு மாணவ, மாணவியருக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள்குறித்த வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை மாணவா்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் ‘தமிழ்ப் பெருமிதம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளரும் பேராசிரியருமான கரு.ஆறுமுகத்தமிழன் சொற்பொழிவாற்றினாா். மேலும், மாபெரும் தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவில் கலந்துகொண்டு தமிழ்ப்பெருமிதம் குறித்து பேசிய 5 பேருக்கும், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி எழுப்பிய 5 மாணவ, மாணவியருக்கும் ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, அரூா் கோட்டாட்சியா் செம்மலை, ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரி முதல்வா் தனிகைவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அ... மேலும் பார்க்க

பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில... மேலும் பார்க்க

புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி ப... மேலும் பார்க்க

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு

வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பத... மேலும் பார்க்க

சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டி

தமழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், மாவட்ட வாரியாக குறைந்தபட்சம் ஒரு தொகுதி என்ற வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் முன்னாள... மேலும் பார்க்க