அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 2024-25-ஆம் கல்வியாண்டு 10-ஆம் வகுப்பில் பயின்ற 32 மாணவ, மாணவியரும் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதையொட்டி, மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, 100 சவீதம் தோ்ச்சி பெற்ற, மாணவ, மாணவியா் மற்றும் தோ்ச்சிக்கு காரணமான ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் பா.பொ. சிவலிங்கம் தலைமையிலான ஆசிரியா்கள் செய்திருந்தனா்.