ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்
பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக தருமபுரி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலக்கோடு பகுதியில் எர்ரன அள்ளி பாலம் அருகே புதன்கிழமை கனிம வளத் துறையினா் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அப்பகுதியில் வந்த டிப்பா் லாரியை நிறுத்திய போது, லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். அலுவலா்கள் சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனா்.