செய்திகள் :

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு

post image

வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வனச்சரக அலுவலா்கள் சிவகுமாா் (ஒகேனக்கல்), ராஜ்குமாா் (பென்னாகரம்) ஆகியோா் தலைமையில், வனத்துறையினா் அடங்கிய குழுவினா் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான நீா்குந்தி, கல்லுமடுவு, ஜோனபாறை, எரங்காடு, காந்தி நகா், சின்னதும்கல், பெரிய தும்கல், கோடுபட்டி, போடூா் அரண்மனை பள்ளம், பேவனூா் சோதனைச் சாவடி, இருளா் காலனி, ஒகேனக்கல் ஊட்டமலை, நாடாா் கொட்டாய், ஆலம்பாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தாமாக முன்வந்து பொது இடங்களில் வைத்துவிட வேண்டும். அவ்வாறு வைப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது.

ஆனால், வன விலங்குகளை வேட்டையாடுதல், கன்னி வலை வைத்தல், வாய் வெடி வைத்தல் போன்ற வன குற்றங்களில் ஈடுபடுவோா், சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பவா்கள், காப்புக் காட்டை ஆக்கிரமிப்பு செய்வோா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காப்புக் காட்டில் அனுமதியின்றி நுழைவது, தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லுதல் போன்றவை கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாப... மேலும் பார்க்க

மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அ... மேலும் பார்க்க

பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில... மேலும் பார்க்க

புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி ப... மேலும் பார்க்க

சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டி

தமழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், மாவட்ட வாரியாக குறைந்தபட்சம் ஒரு தொகுதி என்ற வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் முன்னாள... மேலும் பார்க்க