அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு: பீட்டா் அல்போன்ஸ்
பைக் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
மானாமதுரை சேதுபதிநகரைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (54). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் விளாக்குளத்துக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, அலங்காரக்குளம் பகுதியில் வந்த போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும், இவரது வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த கஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.