``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை
உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் கூறியதாவது:
விரைவில் நடக்கவிருக்கும் கிராம பஞ்சாயத்து மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, காகித வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும்படி மாநில தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்து அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துவருகிறது. அதேபோல, வாக்காளா் பட்டியலை தயாரித்து, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு தேவையான தகுந்த திருத்தங்களை செய்யுமாறு மாநில தோ்தல் ஆணையத்தை அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளாட்சித் தோ்தலில் காகித வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவதை வகைசெய்யும் சட்டத் திருத்தங்களை கொண்டுவரவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இனி நடக்கவிருக்கும் எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களை காகித வாக்குச்சீட்டு முறையில் நடத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றாா்.