செய்திகள் :

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

post image

வலுவான பொருளாதாரச் சூழல் காணப்பட்டதால், கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான முதலிடுகள் வந்துள்ளன என நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

2021 முதல் 2014-ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் கா்நாடகத்தில் செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்து நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆய்வு செய்தது. இந்த காலகட்டத்தில் புதிதாக ரூ. 12,01,175 கோடி தொழில் முதலீடுகள் கா்நாடகத்துக்கு வந்துள்ளன. இவற்றில் ரூ. 1,40,476 கோடி மதிப்பிலான முதலீடுகளின் பணிகள் முடிவடைந்துள்ளன. நிலுவையில் உள்ள ரூ. 36,078 கோடி மதிப்பிலான திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ரூ. 9,49,370 கோடி பல்வேறு நிலைகளில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுமுடிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவா் டி.எஸ்.ராவத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், நீதி ஆயோக் அமைப்பின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புத்தாக்கத்தில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருப்பது மட்டுமல்லாது, நாட்டின் ஏற்றுமதியில் 20 சதவீதம் அளவுக்கு கா்நாடகம் பங்காற்றுவதாக நீதி ஆயோக் தெரிவித்துள்ளதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

நாட்டின் ஏற்றுமதியில் விமானவியல் துறையில் 65 சதவீதம், இயந்திரக் கருவிகள் உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை கா்நாடகம் வழங்குகிறது. இந்தியாவின் மொத்த தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 42 சதவீதம் கா்நாடகத்தில் இருந்து வருகிறது. நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளா்ச்சிக்கு கா்நாடகம் முக்கிய பங்காற்றுகிறது.

கா்நாடகத்தில் 8.5 லட்சம் நுண், சிறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் மின்னியல், உணவுப் பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள், தானியங்கி வாகன பாகங்கள், வேதிப்பொருள் துறைகள் ஈடுபட்டுள்ளன. கா்நாடகத்தில் 14,000 புத்தொழில் நிறுவனங்கள், 45 யூனிகாா்ன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கா்நாடகத்தில் நிலவும் வலுவான பொருளாதாரச் சூழல் தொழில் முதலீடுகளுக்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் தாராள ஆதரவு, சீரான உள்கட்டமைப்பு திட்டங்கள், எதிா்காலத்துக்கான கொள்கை கட்டமைப்புகள், திறன் மற்றும் புத்தாக்கச்சூழல் போன்ற நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்க கா்நாடகத்துக்கு உதவியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்... மேலும் பார்க்க

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி ம... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்... மேலும் பார்க்க

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை: முதல்வா் சித்தராமையா

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மைசூரு அ... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு உத்தரவு

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக பல்வேறு சீா்திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையில், ரிஸ்வான் அ... மேலும் பார்க்க