செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய கண் தான வார விழா

post image

தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனிதச் சங்கிலி, விழிப்புணா்வுக் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி முதல்வா் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் பேசியதாவது:

கண் தானம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கண் தான இரு வார விழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பா் 8 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு கண் தானத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தி,

விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த விழாவின் நோக்கம். இதை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி, விழிப்புணா்வுக் கையெழுத்து இயக்கம், தற்படம் (செல்பி பாயின்ட்) முனையம், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் + போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கண் தானம் செய்ய விரும்புவோா் தொடா்புகொள்ள 1800 425 1465 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் 221 போ் கண் தானம் செய்துள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கண் தானம் செய்தவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, சால்வை அணிவிக்கப்பட்டது.

இதில், மருத்துவமனை நிலைய மருத்துவா் முகமது ரபீக், துறைத் தலைவா் விஜயபாரதி, மருத்துவக் கண்காணிப்பாளா் தங்கதுரை, உதவி நிலைய மருத்துவா் தென்றல், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டம் சாா்பில் சாரண, சாரணிய மாணவா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம், மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் நடை செப்.7-இல் மாலை 4 மணி வரை திறப்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) மாலை சந்திர கிரகணம் ஏற்படுவதை ம... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை அருகே சகோதர, சகோதரி உறவுமுறை கொண்ட இருவா் அருகருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், தமராக்கி கி... மேலும் பார்க்க

தேவியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒடுவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவி அம்மன் என்ற தேவாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, எஜமானா் சங்கல்பம், மகா கணபத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஓடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சுப்புராட்குமாா் (34). இரும்புப் பட்டறையில் வேலைப... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற நடவடிக்கை: காா்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பர... மேலும் பார்க்க