அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு: பீட்டா் அல்போன்ஸ்
வழக்குடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கீழமேல்குடியில் அமைந்துள்ள பூா்ணா புஷ்கலாம்பாள் சமேத வழக்குடைய அய்யனாா், சோனையா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலின் முன் யாக சாலை அமைத்து, அதில் புனிதநீா் கலசங்கள் வைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை பூஜைகள் தொடங்கின. பின்னா், நான்காம் கால பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மூலவா் வழக்குடைய அய்யனாா், சோனையா சுவாமி மூலவரின் விமானக் கலசம், கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. விமானக் கலசத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.
ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா், சோமாஸ் கந்தன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியா்கள் குடமுழுக்கை நடத்தினா். இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கீழமேல்குடி கிராம மக்கள், கோயில் குலதெய்வ வழிபாட்டுக் குழுவினா் செய்தனா்.