செய்திகள் :

‘டைனோசர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஓர் ஆச்சரியப் பின்னணி

post image

‘டைனோசர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரிய, செதில்கள் நிறைந்த மிருகங்கள், முன்பு ஒரு காலத்தில் உலவிய காட்சிகள் நம் மனதில் தோன்றும். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ‘டைனோசர்’ பெயரின் தோற்றம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

‘டைனோசர்’ என்ற பெயரின் தோற்றம்:

‘டைனோசர்’ என்ற சொல் இன்று பலவகையான பழங்கால ஊர்வனவற்றைக் குறித்திருக்கிறது. 1800களின் தொடக்கத்தில் பிரிட்டனில் புதைபடிவக் கண்டுபிடிப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் புதைபடிவங்கள், நவீன ஊர்வனவற்றில் இல்லாத வகையில் முதுகெலும்புகளைக் கொண்டிருந்தன.

டைனோசர் எச்சங்கள்

சர் ரிச்சர்ட் ஓவன் என்பவர் இந்தப் புதைபடிவங்களை ஆய்வு செய்தபோது, அவை தனித்துவமான ஒரு குழுவைச் சேர்ந்தவை என அடையாளம் கண்டுள்ளார்.

1841ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயின்ஸ் மாநாட்டில், ஓவன் இந்த வகைப்பாடு குறித்து விவரித்திருக்கிறார். “இத்தகைய தனித்துவமான குணங்கள், ஊர்வனவற்றில் முற்றிலும் புதியவை. இவை மிகப்பெரிய அளவிலான உயிரினங்களால் வெளிப்படுத்தப்பட்டவை.

ஒரு தனித்துவமான ஊர்வனவற்றின் கிளையை உருவாக்குவதற்கு இது போதுமான காரணமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இதற்கு நான் ‘டைனோசோரியா’ என்ற பெயரை முன்மொழிகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

ஓவன் இந்தப் பெயரை கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. ‘டைனோஸ்’ (deinós) என்றால் “பயங்கரமான” அல்லது “பிரமிக்கத்தக்க பெரிய” என்று பொருளாம். ‘சவுரோஸ்’ (saúros) என்றால் “பல்லி” என்று பொருள். இதனால், இந்தப் பெயர் நேரடியாக “பயங்கரமான பல்லி” அல்லது “பிரமிக்கத்தக்க பெரிய பல்லி” என்று பொருள்படுகிறது என்று ஃபிலிப் ஜே. கியூரி டைனோசர் அருங்காட்சியகம் தெரிவிக்கிறது.

காலப்போக்கில், ‘டைனோசர்’ என்ற சுருக்கப்பட்ட பெயர் பொதுவான பயன்பாட்டில் வந்தது. அறிவியல் முன்னேறும்போதும் கூட, இந்தப் பெயர் புதைபடிவவியலில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

China: குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் `ரோபோக்கள்' - மனிதனுக்கு கிடைக்கும் பயன் என்ன?

சீன விஞ்ஞானிகள் மனித குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் முதல் "கர்ப்ப ரோபோவை” உருவாக்கி வருவதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில்... மேலும் பார்க்க

ஒட்டக கண்ணீர் பல வகை பாம்பு விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டதா? - ஆராய்ச்சி சொல்வது இதுதான்!

ஒட்டக கண்ணீரில் உள்ள ஆன்டிபாடிகள் பல பாம்பு இனங்களின் விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டவை என தகவல்கள் வெளியாகின. துபாயில் உள்ள ஒரு கால்நடை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இவ்வாறு வந்ததா... மேலும் பார்க்க

நிலவில் அணுமின் நிலையம்: ``சந்திரனை உரிமை கோருவோம்'' - அமெரிக்காவின் திட்டம் என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அரசாங்கம் நிலவில் அணு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிகழ்த்த உத்தரவிட்டுள்ளது. நாசாவின் தற்காலிக நிர்வாகி சீன் டஃபி கூறியதன்படி, 2030-க்குள் இந்த திட்டத்தைப் ச... மேலும் பார்க்க

மர்மமான முறையில் இறக்கும் கடல் நட்சத்திரங்கள்; காரணத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் கடந்த பத்தாண்டுகளாக ஏராளமான கடல் நட்சத்திரங்கள் (சீ ஸ்டார்ஸ்) மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கடல் நட்சத்திரங... மேலும் பார்க்க

2025: விண்வெளியில் கண்டறியப்பட்ட 3I/ATLAS; பாபா வங்கா கணிப்புடன் இதை தொடர்புபடுத்துவது ஏன்?

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2025-ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்பு, தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ள... மேலும் பார்க்க

NISAR Satellite: `நிசார் செயற்கை கோள்' - நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?

நிசார் செயற்கைக்கோள் (NISAR Satellite) இந்தியா மற்றும் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டுத் திட்டமாகும். இது இயற்கை வளங்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் துல்லியமான தரவுகளை வழங்கும் வ... மேலும் பார்க்க