செய்திகள் :

2025: விண்வெளியில் கண்டறியப்பட்ட 3I/ATLAS; பாபா வங்கா கணிப்புடன் இதை தொடர்புபடுத்துவது ஏன்?

post image

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

2025-ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்பு, தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. விண்வெளியில் 3I/ATLAS எனும் மர்ம பொருள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்த கணிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.

பாபா வங்காவின் கணிப்பு என்ன?

"2025ல் மனித இனம் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும், இது உலகளாவிய நெருக்கடி அல்லது அழிவை ஏற்படுத்தலாம்" என பாபா வங்கா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கணிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் 3I/ATLAS என்ற மர்ம பொருளை விண்வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பலரும் அந்த கணிப்பு நடந்துவிடுமோ என்று நம்பி வருகின்றனர்.

Baba Vanga

3I/ATLAS, மர்மமான பொருள்

சிலியில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட 3I/ATLAS, மணிக்கு 1.3 லட்சம் மைல் வேகத்தில் பயணிக்கிறது. இது 10-20 கிலோமீட்டர் அளவு கொண்டதாக, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நகரத்தின் அளவுக்கு நிகரானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வேகமும், பயணப் பாதையும் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் கவனம் பெற்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது வேற்று கிரக விண்கலமா?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவி லோய்ப் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள், 3I/ATLAS-இன் அசாதாரண பண்புகள் காரணமாக இது வேற்று கிரக விண்கலமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் சிலர் இது ஒரு விண்கல் அல்லது வால்மீன் என்று வாதிடுகின்றனர்.

NASA

நாசாவின் தகவலின்படி, இந்த பொருள் 2025 அக்டோபர் 30-ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 130 மில்லியன் மைல் (210 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.

இது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு உள்ளேயே இருக்கும். மேலும், இது 2025 நவம்பரில் பூமியை நெருங்கினாலும், பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாசா உறுதியளித்துள்ளது.

யார் இந்த பாபா வங்கா?

பாபா வங்கா, செர்னோபில் பேரழிவு மற்றும் 9/11 தாக்குதல்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் முன்கணிப்பாளர். அவரது கணிப்புகள், இன்றும் உலகளவில் பலரால் வியப்புடன் பேசப்படுகின்றன.

3I/ATLAS-ன் வருகை மற்றும் பாபா வங்காவின் கணிப்பு ஒன்றிணைந்து, 2025-ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு குறித்து பலரை சிந்திக்க வைத்துள்ளது. இது உண்மையில் வேற்று கிரக விண்கலமா அல்லது இயற்கையான விண்பொருளா என்பதை அறிய, விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

NISAR Satellite: `நிசார் செயற்கை கோள்' - நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?

நிசார் செயற்கைக்கோள் (NISAR Satellite) இந்தியா மற்றும் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டுத் திட்டமாகும். இது இயற்கை வளங்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் துல்லியமான தரவுகளை வழங்கும் வ... மேலும் பார்க்க

”பாதரசத்தை தங்கமாக மாற்ற முடியும்” - அமெரிக்க நிறுவனத்தின் அதிசய கண்டுபிடிப்பு! எப்படி சாத்தியம்?

அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தங்கத்தை உற்பத்தி செய்வதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறதுசான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மாரத்தான் ஃப்யூஷன் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம், புதிய மு... மேலும் பார்க்க

பூமிக்கு அருகில் வருவது வேற்று கிரக உளவு கருவியா, வால் நட்சத்திரமா..? - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

ஒரு சிறிய அளவிலான விசித்திரமான பொருள் நமது சூரிய மண்டலத்தில் அதிவேகமாக பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது வெறும் வால் நட்சத்திரமா? அல்லது வேற்று கிரக தொழில்நுட்பமா? என்ற கேள்வியை விஞ்ஞ... மேலும் பார்க்க

2025 OL1: பூமியை நெருங்கும் விமான அளவிலான கோள்.. பாதிப்பு வருமா? - நாசா சொல்வதென்ன?

ஜூலை 30, 2025 அன்று '2025 OL1' என்ற சிறுகோள் பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் விமானத்தின் அளவைப் போன்றது, ஆனால் இது பூமியைப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும்,... மேலும் பார்க்க

LPG எரிக்கப்படும் பொழுது வெளியேறும் கரியமில வாயு! - புதிய மாற்றை முன்வைக்கும் இந்திய விஞ்ஞானி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

150 வயதில் பாலியல் முதிர்ச்சி; இன்றும் வாழும் 400 ஆண்டுகள் பழமையான சுறா; நீண்ட ஆயுள் ரகசியம் என்ன?

வட அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர்ந்த, இருண்ட பகுதியின் ஆழத்தில் வாழும் ஓர் அற்புத உயிரினம் பற்றி தான் தெரிந்துக்கொள்ளப் போகிறோம். இது உயிரினங்களில் மிக நீண்ட ஆயுள் கொண்டதாக அறியப்படுகிறது.400 ஆண்டுகள... மேலும் பார்க்க