செய்திகள் :

விருதுநகர்: ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கு; 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டாஸ்மாக் முன்னாள் ஊழியர் கைது!

post image

விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2008-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து பிரேம்குமார் மேல் முறையீடு செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை 2018-ல் தள்ளுபடி செய்தது. அதன் பின் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீடும் 2019-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிரேம்குமார்

இதையடுத்து குற்றவாளி தலைமறைவாக இருந்து வந்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் பிடி ஆணை பெற்றனர். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், நேற்று மதுரை வில்லாபுரம் மணிகண்ட நகர் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த அவரை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் வீரணன் அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல... மேலும் பார்க்க

ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த பொறியாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வருப... மேலும் பார்க்க

Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்... மேலும் பார்க்க

ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை: SBI ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயு... மேலும் பார்க்க

ஜப்பானில் தரையிறங்கிய போலி கால்பந்து அணி - நாடுகடத்திய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது... மேலும் பார்க்க

சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?

சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திர... மேலும் பார்க்க