உலக தடகள சாம்பியன்ஸிப்: ஒலிம்பியன்கள் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஏமாற்றம்!
கல்கியிலிருந்து தீபிகா நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?
நடிகை தீபிகா படுகோன் கல்கி ஏடி படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2898 திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிகை தீபிகா படுகோன் இருக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்திருந்தது.
இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், “ கல்கி 2898 ஏடி போன்ற திரைப்படத்தில் நடிக்க ஒத்துழைப்பும் சில விஷயங்களும் தேவைப்படுகின்றன. நீண்ட ஆலோசனைக்குப் பின், தீபிகாவும் கல்டி ஏடி குழுவும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்திருக்கிறோம்.
இதனால், தீபிகா படுகோன் கல்கி 2898 ஏடியின் இரண்டாம் பாகத்திலிருந்து நீக்கப்படுகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். அவருடைய எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்படத்திலிருந்து தீபிகா படுகோன் ஏன் திடீரென நீக்கப்பட்டார் என ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தீபிகா தரப்பிலிருந்து தயாரிப்பு தரப்புக்கு வைக்கப்பட்ட நிபந்தனைகளே அந்த நீக்கத்திற்கு காரணமாம்.
முக்கியமாக, தீபிகா படுகோன் நாளொன்றுக்கு 7 மணி நேரம்தான் படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம். மேலும், முதல் பாகத்தின் சம்பளத்தைவிட 25% அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடன் வரும் 25 பேர் கொண்ட குழுவினருக்கு சம்பளம் உள்பட பிற செலவுகளையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாராம்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், தீபிகா படுகோனை நீக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!