செய்திகள் :

Kamal: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?"- கமல் சொன்ன பதில்

post image

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் பங்கேற்று வருகிறார்.

ஸ்டாலின், கமல் ஹாசன்

இன்று (செப்.18) மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 'திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரா கமல்' என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த கமல், "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தென்காசி: "வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்ட... மேலும் பார்க்க

Youtube: யூடியூப் சேனல்களுக்கும் லைசென்ஸ் அவசியம்; கர்நாடக அரசின் திட்டமும், தர்மஸ்தலா பின்னணியும்?

கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையைக் கொண்டுவர கர்நாடக அரசு ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி: "இபிஎஸ்-ஐ கலந்தாலோசிக்காமல், எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது" - ஹெச்.ராஜா பேட்டி

"தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகிவிட்டாரே?" "தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி.தினகரனும் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது. மக்கள் விரோத... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன் - ஜக்தீப் தன்கர் பங்கேற்பு; ராகுல் காந்தி ஆப்சன்ட்

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நட... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்கு ஆதரவா?

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் ... மேலும் பார்க்க

``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எடப்பாடி குற்றச்சாட்டு

திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளில் சுற்றுப் பய... மேலும் பார்க்க