செய்திகள் :

இவை ஆபத்தான சுய இன்பங்கள்; எச்சரிக்கும் பாலியல் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 258

post image

எப்போதும் ’சுய இன்பம் நல்லதுதான். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்பார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ்.

அவர், ஆண், பெண் இருவருக்குமான ஆபத்தான செயல்களால் சிக்கலுக்கு ஆளாகி அவரிடம் சிகிச்சை வந்தவர்கள் பகிர்ந்தவற்றைத் தொகுத்து இந்தக் கட்டுரையில் எச்சரிக்கிறார். 

சில சுய இன்பங்கள் நீங்கள் நினைத்துப் பார்த்திராத ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
ஆபத்தான சுய இன்பங்கள்

ஆபத்தான சுய இன்பங்களை ஆண்கள் அதிகம் செய்கிறார்கள். கண்ணாடி பாட்டிலை ஆணுறுப்பில் மாட்டும் போது கண்ணாடி உடைந்து ஆணுறுப்பு துண்டாகலாம். 

சிலர் ஆணுறுப்பில் கம்பியை சொருகியும் பிளாஸ்டிக் குச்சிகளை சொருகியும் சுய இன்பம் அடைய முயற்சி செய்வார்கள். 

சிலர் விரலில் இருக்கிற மோதிரத்தை ஆணுறுப்பில் மாட்டி சுய இன்பம் செய்வார்கள். சிலர் மெட்டல் வளையங்களை வைத்தும் இப்படி செய்வார்கள். இப்படி செய்யும் போது ஆணுறுப்பு விறைப்பு அடைந்த நிலையில் மோதிரத்தை கழட்ட முடியாது. மோதிரம் மாட்டி இருப்பதால் ஆணுறுப்புக்கு வந்த ரத்த ஓட்டம் திரும்ப முடியாமலும் விறைப்பு தன்மையும் குறையாமலும் இருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கூட இன்னும் விறைப்பு தன்மை குறையவில்லை என வருவார்கள். ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். மோதிரத்தை கட் செய்தால் தான் ஆணுறுப்பை காப்பாற்றவே முடியும். 

சுய இன்பம்
சுய இன்பம்

இதே போன்ற ஆபத்தான சுய இன்பங்களை பெண்களும் செய்கிறார்கள். உடையக்கூடிய கண்ணாடி பொருள்களை வைத்து செய்வது... ஏதோ ஒரு காய்கறி, உதாரணத்துக்கு கேரட், கத்தரிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய் என்று காய்கறிகளை வைத்து சுய இன்பம் செய்வது என முயற்சி செய்யும் போது காய்கறி உடைந்து உறுப்புக்கள் மாட்டிக்கொண்டால் எமர்ஜென்சியாக மருத்துவரை பார்க்க நேரிடும். அது அவர்களுக்கு கூச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

சில பெண்கள் சின்னச் சின்ன மெட்டல் உருண்டைகளை பெண்ணுறுப்புக்குள் போட்டு விடுவார்கள். இது அவர்களுடைய சிறுநீரக பைக்குள் போய் விழுந்து எப்போதும் சிறுநீரகத்தொற்றுடனே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 

உச்சகட்டம் போலவே சுய இன்பமும் நல்ல விஷயம்தான். அதனால் எந்தக் கெடுதலும் வராதுதான். என்றாலும் இப்படி வினோதமான ஆபத்தான முறைகளில் ஈடுபடாதீர்கள். அது, உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து, ஒரு எமர்ஜென்சி நிலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே' மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257

''இது எய்ட்ஸ் அதிகரித்துவிட்ட காலகட்டம். முன் எப்போதையும்விட ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகப் பார்க்கிறேன். காரணம் ஹேப்பி எண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே கிடைக்கிற செக்ஸ் வாய்ப்புகள். ஹ... மேலும் பார்க்க

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256

''வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, ... மேலும் பார்க்க

Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing

தன்னுடைய உறுப்பு பெரிதாக இல்லை என்கிற எண்ணம் கிட்டத்தட்ட 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இதில் சிலர் ஆணுறுப்பை மசாஜ் செய்து பெரிதாக்கி விடலாம் என்கிற நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மைதானா; இந்த ... மேலும் பார்க்க

வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254

கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது தற்போது சகஜமாகிக்கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக இது பெற்றோர்களாலே நடத்தி வைக்கப்பட்டது. இந்தக் காலத்தில் காதல் திருமணங... மேலும் பார்க்க