செய்திகள் :

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்கு ஆதரவா?

post image

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (செப்.9) நடந்தது.

17வது துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மொத்தமுள்ள 781 வாக்குகளில் வெற்றிபெற தேவையான 391 வாக்குகளை விட 61 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலிருந்து மூன்றாவது துணைக் குடியரசுத் தலைவராகியிருக்கிறார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

நாடாளுமன்றம்

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் ரகசியமான முறையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கட்சி மாறி வாக்களிப்பதற்காக கோடிகளில் பேரம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 427 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விற்கு ஆதரவளித்திருந்தது.

அதன் 11 எம்.பி.க்களைச் சேர்த்தால் பா.ஜ.க வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 438 ஓட்டுகள்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 452 ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு 300 ஓட்டுகளே கிடைத்திருக்கின்றன.

இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்க்கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் 14 எம்.பிக்கள் கட்சி மாறி, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போட்டிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கட்சி மாறி ஓட்டு போட பல கோடி பேரங்கள் நடந்திருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன் - ஜக்தீப் தன்கர் பங்கேற்பு; ராகுல் காந்தி ஆப்சன்ட்

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நட... மேலும் பார்க்க

``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எடப்பாடி குற்றச்சாட்டு

திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளில் சுற்றுப் பய... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கடும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலர்கள்; நெகிழ்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்!

திண்டுக்கல்லில் கடந்த மாதம் முழுவதுமே கடுமையான வெயில் சுட்டெரித்தது. கடுமையான வெயிலுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நகர் முழுவதுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக... மேலும் பார்க்க

Tirupati: "ஆன்லைன் புக்கிங் மோசடிகள்; பக்தர்கள் கவனத்திற்கு..." - திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்​டோபர் 2-ம் ​தேதி வரை நடைபெறவிருக்கிறது. கொடியேற்​றம், சின்ன சேஷ வாகன... மேலும் பார்க்க

தலைநகரில் வீசும் தமிழ் மணம்; டெல்லி `தமிழ்நாடு இல்லம்' Spot Visit | Chanakyapuri

டெல்லி சாணக்கியபுரியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லம், வெறும் தங்குமிடம் மட்டுமல்ல, அது தமிழர்களின் கலை, பண்பாடு, மற்றும் அறிவைப் பரப்புவதற்கான இடமாகவும் செயல்படுகிறது. இங்குள்ள 'ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; குடிநீருக்கு அல்லாடும் மக்கள்.. நிலை மாறுமா?

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகள் பழைமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பூங்குடியைச் சுற்றியுள்ள பெரியத்தெரு, காலனித்தெரு... மேலும் பார்க்க