செய்திகள் :

``9 பேர் மட்டும் வைத்து அட்வன்சர் படம், பகத் பாசில், ஹீரோயின் இல்லாமலே காதல் கதை'' - பிரேம்குமார்

post image

இயக்குநர் பிரேம் குமாரின் ‘96’ திரைப்படம் அனைவரையும் கவர்ந்து மனதில் நின்றது. கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை, பாடல்கள், நடிப்பு என அனைத்துமே சிறப்பாக அமைந்திருந்தது.

இதையடுத்து ‘மெய்யழகன்’ திரைப்படம் மனங்களை நெகிழ வைத்திருந்தது. இருப்பினும், இப்படம் வெளியான போது பல எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன.

Meiyazhagan Director Prem Kumar

இதுகுறித்து வருத்தத்துடன் பேசியிருந்த பிரேம்குமார், "பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்வது இப்போது 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது.

நேர்மையான விமர்சகர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். நேர்மையான விமர்சகர்களிடம் ஒரு படத்தைச் சரியாக விமர்சனம் செய்வதற்குப் போதுமான திறமைகள் இல்லை.' என்று பேசியிருந்தார்.

இதையடுத்து சில திரைப்பட விமர்சகர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேசி நல்ல விமர்சனங்களை ஏற்றும் கொண்டார்.

இந்நிலையில் கோபிநாத்துடனான நேர்காணலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியிருக்கும் பிரேம்குமார், "வெறும் 9 கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஆக்‌ஷன் அட்வன்சர் படம் பண்ணப்போறேன்.

குறைவான கதாபாத்திரத்தை வைத்து எடுப்பது எனக்குப் பிடிக்கும். சயின்ஸ் ஃபிக்‌ஷன் என அறிவியல் மற்றும் வரலாற்று படம் பண்ணப்போறேன்.

பகத் பாசிலை வைத்து எடுக்கும் படம் ஆக்‌ஷன் திரில்லர், வித்தியாசமாக இருக்கும். இப்போ நாம் பண்ணப்போற படமும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் கதைகள் வித்தியாசமாக இருந்தாலும், என்னுடைய படங்களில் உணர்ச்சிகளும், மனதைத் தொடும் உணர்வும் எப்போதும் மாறாது.

என்னுடைய 5வது படம் காதல் கதைதான், ஆனால் அதுல ஹீரோயினே வரமாட்டாங்க. ரொம்ப வித்தியாசம பண்ணணுமேனு பண்றதில்ல. கதை நம்ம எங்க கூட்டிகிட்டு போகுதோ அதோடு போக்குலேயே நீரோட்டம்போல போகணும்னு நினைக்கிறேன்." என்று பேசியிருக்கிறார்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vadivelu: ``மக்கள்தான் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்'' - பிறந்தநாளில் வடிவேலு நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.இன்று (செப். 12) தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் வாழ்... மேலும் பார்க்க

``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தற்போது ‘பென்ஸ்’, ‘ஹண்டர்’, ‘புல்லட்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.மேலும் ‘காஞ்சனா 4’ படத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கவும் இருக்கிறார்.திரைத்துறையைத் தாண்டி தனது அறக்கட்டளையின்... மேலும் பார்க்க

வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ஆட்கொண்ட கதை!

இளையஞானி இளையராஜா சினிமா இசை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. இதை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்... மேலும் பார்க்க

Shakthi Thirumagan: ``இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை" - ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண... மேலும் பார்க்க