செய்திகள் :

பணமோசடி புகார்: குடுமியான்மலை ரவிசந்திரன் கைது!

post image

குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் தனது தந்தை பெயரில் குடுமியான்மலையைத் தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

இவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூலித்து திருப்பி வழங்கவில்லை எனப் புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில், காரைக்குடியில் தலைமறைவாக இருந்த ரவிசந்திரனை தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்து தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, ரவிசந்திரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இவரின் மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடதக்கது.

CBCID arrests Kudumiyanmalai Ravichandran

இதையும் படிக்க : நேபாள கலவரத்தில் பலியான இந்தியப் பெண்!

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் ம... மேலும் பார்க்க

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடிய... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க