செய்திகள் :

`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?' - செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல்வதென்ன?

post image

சீனாவில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது. கழிப்பறை எப்படி சுற்றுலா தளமாக மாறும் என்று பலரும் யோசிக்கலாம்.

ஆனால், கழிப்பறையாக இருந்தாலும் அது கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தால் மக்கள் அதனை ரசிப்பார்கள் என்று இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறையை காண பார்வையாளர்கள் அதிகம் வருகின்றனர்.

இங்கு வந்து புகைப்படம் எடுக்கவும் மக்கள் கூடுவதாக South Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.

டன்ஹுவாங்கில் இருக்கும் இந்த பொது கழிப்பறை எதிர்பாராத விதமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. டன்ஹுவாங் என்றால் சீன மொழியில் "பெரிய மற்றும் வளமான" என்று பொருள்படும்.

யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட பிரபலமான மொகாவோ குகைகள் அமைந்துள்ள நகரத்தில் இருக்கும் இந்த கழிப்பறை கலை மற்றும் பாரம்பரியத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கழிப்பறையில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஆண்ட்டி பாக்டீரியா நர்சிங் டேபிள்கள், குழந்தை பாதுகாப்பு இருக்கைகள், தானாக சுத்தம் செய்யும் அமைப்புடன் கூடிய தாய் சேய் அரை போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.

இதனால் பார்வையாளர்கள் இதனை ஒரு கழிப்பறையாக அல்ல, ஓய்வு இடமாக கருதி புகைப்படங்களை எடுக்க முன் வருகின்றனர்.

டன்ஹுவாங் இரவு சந்தையில் உள்ள இந்த பொது கழிப்பறை இணையத்தில் வைரலாகி, பல சுற்றுலாப் பயணிகள் அதன் கலைநயமிக்க வடிவமைப்பைப் பாராட்டி வீடியோக்களை பதிவிடுகின்றனர்.

சீனா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

`மெக்டொனால்டில் பாத்திரம் கழுவி முதல் சம்பளம் வாங்கினேன்' - பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிவியில் நடிக்க வந்திருக்கிறார். அவர் தற்போது கியுங்கி சாஸ் பி கபி பஹு தி சீசன் 2ல் நடித்து வருகிறார். அவர் ராகுல் காந்தியை எதிர்... மேலும் பார்க்க

`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்சய் தத்!

மும்பையில் பாலிவுட் ரெஸ்டாரண்ட்ஸ் மும்பையில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உப தொழிலாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர். இதில் ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகை ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், இய... மேலும் பார்க்க

`இரவு 7 முதல் காலை 6 வரை வேலை செய்யலாம்..'- பெண்கள் நைட்ஷிஃப்ட் பணியாற்ற குஜராத்தில் சட்டத்திருத்தம்

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற ஏதுவாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

சஞ்சய் கபூர் ₹30,000 கோடி சொத்து: உயில் குறித்து பிரியா சச்சிதேவ், கரிஷ்மா பிள்ளைகள் வாக்குவாதம்

சஞ்சய் கபூர் விவாகரத்துடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தனர். அதில் ... மேலும் பார்க்க

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க

The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவரம் என்ன?

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்க... மேலும் பார்க்க