செய்திகள் :

The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவரம் என்ன?

post image

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்கள், பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.

பெரான் குடும்பத்தினர் வசித்து வந்த இந்த வீடு, 2013 ஆம் ஆண்டு திகிலூட்டும் படத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த வீட்டில் பெரான் குடும்பம் குடிபுகுந்தபோது பல்வேறு குழப்பமான நிகழ்வுகளை அனுபவித்ததாக கூறியிருந்தனர். இதனையடுத்து அந்த வீடு தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் இந்த வீடு மேலும் பிரபலம் அடைந்தது. இப்போது இந்த சொத்து சில நிதி சிக்கல்களில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதன் உரிமையாளர்கள் இதனை விற்க முன்வந்துள்ளனர்.

கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்பவர் இந்த வீட்டை வாங்கி ஒரு அமானுஷ்ய பேய் சுற்றுலா வணிகமாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த அமானுஷ்ய சுற்றுலா நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தபோதிலும் பல்வேறு சர்ச்சைகளில் அந்த சொத்து சிக்கியதை அடுத்து அதிகாரிகள் பொழுதுபோக்கு உரிமத்தை ரத்து செய்தனர்.

ஆனால் தனது உரிமத்தை இழந்தபோதிலும் ஜாக்குலின் தொடர்ந்து நடத்துவதாக குறிப்பிட்டு பலரிடம் பல்லாயிரக்கணக்கான பணத்தை பெற்றிருக்கிறார். அந்த அமானுஷ்ய வீடு மேலும் மேலும் சர்ச்சையில் சிக்கியது. இப்படி இருக்கையில் இந்த வீடு விற்பனைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க

Nano Banana: இணையத்தில் வைரலாகும் ”நானோ பனானா” ட்ரெண்ட் - பின்னணி என்ன?

ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி நொடிபொழுதில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.தற்போது, ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக... மேலும் பார்க்க

Dosa: தோசை மீதான காதலால் கோடிகளில் லாபம் ஈட்டும் தம்பதியினர்; ஓர் அடடே ஸ்டோரி!

அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு தோசை மீதான காதலால் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.அகில் ஐயர் மற்றும் ஸ்ரேயா நாயர் என்ற தம்பதியினர் புதுமண தம்பதிகளாக மும்பையில் தரை ... மேலும் பார்க்க

மரத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்ட நபர்; மதிப்பு ரூ.11,000 என தெரிந்ததால் ரயில்வே அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மற்றும் நாந்தேட் இடையேயான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது யவத்மால் மாவட்டத்தில் உள்ள கார்ஷி என்ற கிராமத்தில் உள்ள கேசவ் ஷிண்டே என்ற விவசாயியின்... மேலும் பார்க்க

``திருமணத்தில் அசைவ உணவு, மது கூடாது'' - ஆடம்பரத்துக்கு தடை விதித்த கிராம மக்கள் - எங்கு தெரியுமா?

கிராமப் பெரியவர்கள் தீர்மானம்திருமணம் என்றாலே இப்போது கோடிகளில் செலவு செய்வது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக பணக்காரக் குடும்பங்களில் திருமண விழா நடத்தும் போது, ஆடம்பரமாக கோடிகளைச் செலவழிப்பது உறுதியே.... மேலும் பார்க்க

எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார் - என்ன நடந்தது?

புதிய கார் அல்லது வாகனம் வாங்கினால் அதனை கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கம். சிலர் வாகனம் வாங்கியவுடன் அதனை முதலில் எலுமிச்சம்பழத்தின் மீது ஏற்றுவதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர். டெல்லியில் ... மேலும் பார்க்க