எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து, நேற்று (செப்.9) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பீப்பள் லிபரேஷன் ஆர்மி எனும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த, ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த மாஸா எனும் நக்சலை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட நபரிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல் சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த சுமார் 231 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!