Dosa: தோசை மீதான காதலால் கோடிகளில் லாபம் ஈட்டும் தம்பதியினர்; ஓர் அடடே ஸ்டோரி!
அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு தோசை மீதான காதலால் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.
அகில் ஐயர் மற்றும் ஸ்ரேயா நாயர் என்ற தம்பதியினர் புதுமண தம்பதிகளாக மும்பையில் தரை இறங்கிய போது அவர்களுக்கு தோசை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நகரத்தின் மூளை முடுக்குகளில் தேடிய பிறகும் கூட தோசையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.
இந்த ஏமாற்றம் அந்தத் தம்பதியினரை ஒரு விஷயத்தைக் கையில் எடுக்கத் தூண்டியிருக்கிறது. அதாவது பெங்களூரு பாணியில் தோசை வழங்கும் சொந்த ஹோட்டலைத் திறக்க அவர்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.
அதற்காக தங்களின் வேலைகளை விட்டுவிட்டு போட்டி நிறைந்த மும்பை நகரத்தில் புதிய ஹோட்டல் உருவாக்க அவர்கள் முடிவு செய்து அதனைச் செயல்படுத்தி உள்ளனர்.

இந்த ஹோட்டல் வேலை குறித்து எந்தப் பின்னணியும் அனுபவமும் இல்லாமல், முதலீட்டாளர்கள் இல்லாமல் மிகக் குறைந்த மூலதனத்துடன் இவர்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
தோசைக்கான மாவைப் பல மாதங்கள் சோதித்து தோல்வி அடைந்திருக்கின்றனர். அதன் பின்னர் மொறுமொறு தோசை எப்படி வரும் என்பதற்கும் அவர்கள் பலமுறை சோதித்து தோல்வி அடைந்திருக்கின்றனர். அதன் பின்னர் இறுதியாகப் பல மாத முயற்சிகள், கடுமையான உழைப்பிற்குப் பிறகு தங்களது கனவு கஃபேயான benne என்ற கடையை மும்பையில் திறந்திருக்கின்றனர்.
இந்த கஃபே ஒரு நாளைக்கு 800க்கும் மேல் தோசையைப் பரிமாறுவதாகக் கூறுகின்றனர். இதிலேயே அவர்கள் மாதம் ஒரு கோடி வரை லாபம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
சாதாரண மக்கள் மட்டுமின்றி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் இந்த கஃபே ஒரு விருப்பமான இடமாக மாறி உள்ளது. கடந்த வருடம் இந்த நட்சத்திர தம்பதியினர் அந்த ஹோட்டலுக்கு வந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!