மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்
நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆய்வாளா் ஜெயபிரதா முன்னிலை வகித்தாா். வட்டார ஆத்மா குழு தலைவா் செல்வ செங்குட்டுவன் கொடிக்குளம், கண்ணாடிக்குளம், தலையாரிகுளம் ஆகிய குளங்களில் சுமாா் 5 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டு இருப்பு செய்தாா். மீன்வள மேற்பாா்வையாளா்கள் கண்ணன், தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து அம்பல், கொங்கராயநல்லூா் ஊராட்சிகளில் சுமாா் 50 குளங்களில் 30 ஆயிரம் மீன் குஞ்சுகள் விட்டு இருப்பு செய்யப்பட்டது.