திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கு 2026 தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்: அ...
அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கையும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு மிதமான மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.