Vikatan Digital Awards 2025: அனைவரையும் ரசிக்க வைக்கும் `Billu Show' - Best Kids...
முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இன்னொரு துயரம்: மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்
முதல்வர் ஸ்டாலினின் மருமகனும், திமுக வியூக வகுப்பாளருமான சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்.
முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரையை திருமணம் செய்ததன் மூலம் திமுக-வின் அங்கமான சபரீசன் தொடர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
சபரீசன் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையின் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று வேதமூர்த்தி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சமீபத்தில் தான் முதல்வர் ஸ்டாலினின் சகோதரியின் கணவர் முரசொலி செல்வம், அண்ணன் மு.க. முத்து உயிரிழந்த நிலையில், இந்த துயர சம்பவமும் முதல்வரின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.