Vikatan Digital Awards 2025: `கலக்கல்ஸ் ஆஃப் நக்கல் - விக்கல்ஸ்' - Best Entertainment Channel Winner
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Entertainment Channel
இப்பிரிவில் மாபு க்ரஷ் & டீம், ஆட்டோகாரன், பனமட்ட, நகைச்சுவைகள், மல்லேஷ் கண்ணன் & பாலமுருகன், மணிஷரண், லுங்கி பாய்ஸ், விக்கல்ஸ், NRFM Vlogs, Vishnu Popzz & Team ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, விக்கல்ஸ் சேனல்!

Best Entertainment Channel - Vikkals
முழுநீளத் திரைப்படத்தை 10 நிமிட `ஸ்பூஃப்' செய்து அலப்பறை கொடுப்பது, நண்பர்களின் உரையாடலை மூலதனமாக வைத்து அன்றாட நிகழ்வுகளை கன்டென்ட் ஆக்குவது, கருத்து விருந்தினை நகைச்சுவை எனும் தலைவாழை இலையில் பரிமாறுவது என ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லியடிக்கிறது இந்த விக்கல்ஸ் டீம்!

`யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவையே எங்கள் மூலதனம்!' என்று சொல்லும் Vikkals டீமுக்கு, Best Entertainment Channel விருதளித்து அகமகிழ்கிறது விகடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...