செய்திகள் :

பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காத நிலையில் அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அன்புமணி தரப்பு பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ``பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளின்படி, கட்சி சட்டத்தின்படி நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் வழங்கப்படவில்லை.

பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட எந்த முடிவுகளாக இருந்தாலும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.

எனவே இன்றைக்கு ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, கட்சி விதிகளுக்கு எதிரானது. பா.ம.க-வை எந்த விதத்திலும் இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தாது.

கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், 'தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை.

எனவே கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் என மூன்று பேருடைய பதவிக்காலத்தையும் 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கும் தீர்மானம்' கொண்டுவரப்பட்டது.

அந்தத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டது.

ராமதாஸ்
ராமதாஸ்

அந்தத் தீர்மான அறிக்கையையும், பா.ம.க சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஆகஸ்ட் மாதம் முறைப்படி தெரிவித்தோம்.

எங்களின் விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் உரிய விதத்தில் ஆய்வு செய்து, பா.ம.க-வின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து, முறைப்படி எங்களுக்கு வழங்கியிருக்கிறது.

அதன்படி பா.ம.க-வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்கிறார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் படியும், கட்சியின் விதிகளின் படியும் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கதல்ல.

அன்புமணி ராமதாஸுக்கு உளவு பார்க்கும், ஒட்டுக் கேட்கும் பழக்கமில்லை. அதில் அவருக்கு விருப்பமும் கிடையாது. ஒருவேளை அப்படி உளவு பார்த்திருந்தால் இப்போது நடந்துகொண்டிருக்கும் எந்தச் சூழலும் நடந்திருக்காது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விஜய்யின் சுற்றுப்பயணம்: "இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" - சீமான்

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்க... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்' - டிடிவி தினகரன்

மதுரை விமான நிலையத்துக்கு பெயர்மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. 'பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்' என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளை... மேலும் பார்க்க

சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உப... மேலும் பார்க்க

``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தின... மேலும் பார்க்க

அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ - ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க