செய்திகள் :

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை - கூகுளுக்கு உத்தரவு!

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்படுத்துகின்றனர். சிலர் ஐஸ்வர்யா ராய் படங்களை ஆபாச நோக்கிலும் பயன்படுத்துகின்றனர். இது தனது தனியுரிமைக்கு எதிராகவும், தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்றும், தனது புகைப்படங்களை எந்த வகையிலும் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பாக ஆன்லைனில் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். ஏ.ஐ. மற்றும் டீப்ஃபேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது புகைப்படத்தை கொண்டு ஆபாச வீடியோக்களை தயாரித்து வெளியிடுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதி தேஜஸ் காரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி உடனடி நிவாரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் படங்களை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், புகைப்படங்கள், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் படங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. அவரது அடையாளத்தை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அவர் அங்கீகரிக்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்.

ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள், படங்கள், பெயர், அவர் படம் போன்ற உருவங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நபருக்கு உரிமை இருக்கிறது. அவற்றை தவறாக பயன்படுத்துவது அவரது கண்ணியத்தை பாதிக்கிறது. எனவே முன்பின் தெரியாதவர்கள் “ஐஸ்வர்யா ராய் பச்சன்”, அதன் சுருக்கமான “ARB”, அவரது படம், ஐஸ்வர்யா ராய் போன்ற படங்களை வணிக ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதை கோர்ட் தடைசெய்தது.

இந்த உத்தரவு அனைத்து ஊடகம், AI, டீப்பேக், ஃபேஸ் மார்ஃபிங் மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் பொருந்தும். இவ்வழக்கில் ஐஸ்வர்யா ராய் தொடர்புடைய URLகளை 72 மணி நேரத்திற்குள் கூகுள் நிறுவனம் அகற்ற வேண்டும். ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட URLகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் மனுதாரரின் பெயர் மற்றும் படங்களை தவறாக பயன்படுத்துவது அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் கணவர் நடிகர் அபிஷேக் பச்சனும் இது போன்ற ஒரு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார்.

``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

Judiciary: ``நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' - இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார்.பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ... மேலும் பார்க்க

``கோயில் பணத்தை கல்விக்கு செலவிடக் கூடாது என கேட்பது ஏன்? இதில் என்ன தவறு?" - உச்ச நீதிமன்றம்

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவில், கோயில் நில... மேலும் பார்க்க

`ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்' - 17 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் மும்பை மாஃபியா அருண் காவ்லி

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அருண் காவ்லி கடந்த 2007ம் ஆண்டு சிவசேனா கவுன்சிலர் கம்லாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு - உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் 'மோசடி' வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்... மேலும் பார்க்க

Bihar SIR: "4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்..." - தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளி... மேலும் பார்க்க