புரோ கபடி லீக் 2025: தமிழ் தலைவாஸை விட்டு வெளியேறிய பவன் செஹ்ராவத்!
'4 நாள்கள் கோமாவில் இருந்தார்; அதன் பிறகுதான்'- விஜய் ஆண்டனி குறித்து ஆண்ட்ரூ லூயிஸ்
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது.
அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் 'கொலைகாரன்' படத்தின் இயக்குநரும், விஜய் ஆண்டனியின் நண்பருமான ஆண்ட்ரூ லூயிஸ் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
"நானும், விஜய் ஆண்டனியும் காலேஜில் ஒன்றாகத் தான் படித்தோம். காலேஜ் படிக்கும்போது அவரை ராஜா என்றுதான் அழைப்பேன்.
'பிச்சைக்காரன்' படத்தில் அவர் நடிக்கும்போது அவருக்கு ஒரு விபத்து நடந்தது. அது அதிர்ச்சியாக இருந்தது. அந்த விபத்தில் இருந்து மீண்டு வந்து வெற்றி படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இதற்கு முன் ஒரு முறையும் விபத்து நடந்திருக்கிறது. காலேஜ் முடித்தப் பிறகு இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்துக்கொள்வோம். அந்த மாதிரி ஒருமுறை சந்தித்து பேசினோம்.
அப்போது விஜய் ஆண்டனி என்னை ஸ்பென்சர் வரைக்கும் போயிட்டு வரலாம் என்று அழைத்தார். ஆனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு ஒரு இரண்டு மாதங்கள் கழித்து வேறு ஒரு நண்பரை சந்தித்தேன். அப்போதுதான் அந்த நண்பர் சொன்னார் இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்துவிட்டது என்று.

எப்படி என்று கேட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னை ஸ்பென்சருக்கு கூப்பிட்ட அந்த நாளில் தான் அவருக்கு விபத்து நடந்திருக்கிறது. அவர் 4 நாட்கள் கோமாவில் இருந்திருக்கிறார்.
பிறகு முயற்சி செய்து இசையமைப்பாளர் ஆனார். அதிலிருந்து நடிக்க சென்றார். அதன்பின் படங்களை இயக்கி, இப்போது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
அவரின் உழைப்பால் எல்லோரையும் ஆச்சரியப்படுத்திகொண்டே இருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றிப்பெற வாழ்த்துகள்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...