இட்லி கடை: நித்யா மெனன் அறிமுக போஸ்டர்!
இட்லி கடை படத்தில் நடிகை நித்யா மெனனின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப். 14 ஆம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றே படத்தின் டிரைலரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகை நித்யா மெனன், கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளர். அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க: கூலி படத்தின் மோனிகா விடியோ பாடல் வெளியானது!