Tirupati: "ஆன்லைன் புக்கிங் மோசடிகள்; பக்தர்கள் கவனத்திற்கு..." - திருப்பதி தேவஸ...
திருப்பூரில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த வீடு!
நாட்டின் குடியரசு துணைத் தலைவராகியிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் எளிமையான மனிதர் என்று கூறிய அவரது உறவினர்கள் அவர் பெற்றிருக்கும் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறுகிறார்கள்.
திருப்பூரில், சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த வீடு இன்னமும் நிலைத்து நிற்கிறது.
திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராகப இரண்டு முறை கோவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அவரது பிறந்த ஊரான சந்திராபுரம் பகுதியில் அவர் பிறந்த பாரம்பரிய வீட்டை பார்க்க முடிகிறது.
பழைய கால தொட்டிக்கட்டு வீடு என்று சொல்லப்படும் இந்த வீட்டில் தான் சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தார். இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மற்றும் அந்த பகுதியினர் கூறுகையில், சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்தது வளர்ந்தது இங்குதான். அவர்களது குடும்பத்தினர் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள். அவர்களது வீடு இந்தப் பகுதியில் அப்போது பெரிய வீடு. அங்கு தான் எல்லார் வீட்டு நல்லது கேட்டது எல்லாம் நடக்கும். பின்னாளில் எம்.பி. ஆன பின்னரும், ஆளுநர் ஆன பின்னரும் கூட, எங்களிடம் எளிமையாக பழகுவார். இந்த பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தான் எந்த நல்லதென்றாலும் செய்வார்.
எம்.பி.யாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, ஆளுநர் ஆவதற்கு முன்பு என முக்கிய நிகழ்வுகளுக்கு இங்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுத்தான் சென்றார். தற்போது குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் வாழ்ந்த வீடு இன்னும். அவர் பேர் சொல்வதாக இருக்கிறது என்றனர்.