செய்திகள் :

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

post image

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற "தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - ஓசூர்"-இல் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

”இன்று, இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகராகவும் ஓசூர்தான் இருக்கிறது! இதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு, ஓசூரின் அடுத்தகட்ட உயர்வுக்கான கதவுகளைத் திறக்கும்!  நான் அதை தொடர்ந்து கண்காணிப்பேன்.

ஸ்டாலின் என்ற பெயருக்கு ‘Man of Steel’-என்று பொருள்! உறுதியோடு சொல்கிறேன். எஃகு போன்ற உறுதியுடன் என்னுடைய இலக்குகளில் வெற்றி பெறுவேன்! எங்கள் அரசு மேல் நீங்கள் நம்பிக்கை வைத்து, முதலீடு செய்ய வந்திருக்கும் உங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை நிச்சயமாக நாங்கள் வழங்க காத்திருக்கிறோம். வழங்குவோம்.  தமிழ்நாட்டுடன் இணைந்து பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி தான்! 

அதனால் எப்போதும் உங்கள் முதலீடுகளை நம்முடைய தமிழ்நாட்டிலேயே மேற்கொள்ளுங்கள்!  கடந்த  மாநாட்டிலும் நான் சொன்னேன்… Tamil Nadu Rising மட்டுமல்ல. Tamil Nadu will keep on Rising-என்று சொன்னேன். நாளைய தமிழ்நாடு, வளர்ச்சிக்கு நல்லுதாரணமாக உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இந்த சிறப்பான மேடையில் இருந்து ஒரு அறிவிப்பை செய்ய நினைக்கிறேன். 

எம்எஸ்எம்இ துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், கோயம்புத்தூரில் ஒரு உலக புத்தொழில் மாநாட்டை நடத்த இருக்கிறது.

இந்த மாநாடு உலகம் முழுவதுமிருந்து தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், புத்தொழில் முனைவோர் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்.

ஸ்டார்ட்-அப் செக்டாரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்த மாநாடு உலகிற்கு பறைசாற்றும்!” என்றார்.

இதையும் படிக்க: மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிரு... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பத... மேலும் பார்க்க

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.ஒசூரில் இன்று காலை தொ... மேலும் பார்க்க