அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அ...
பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!
கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கூறியுள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவின் மீது, பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸின் தலைவர்களைக் குறிவைத்து, கடந்த செப்.9 ஆம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு பேசிய கத்தார் பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் வளைகுடா நாடுகளிடையே மிகுந்த கோவத்தைத் தூண்டியுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், நேற்று நடைபெற்ற தாக்குதலின் மூலம் நெதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான எந்த நம்பிக்கையையும் கொன்றுவிட்டார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கத்தாரின் தோஹா நகரத்தின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் மூலம் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தான்: 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாரியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள்!