கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!
'25 நாள் படம் ஓடினாலே ப்ளாக் பஸ்ட்டர்'னு சொல்றாங்க; விஜய் ஆண்டனி சாரின்...'- சுசீந்திரன் சொல்வதென்ன?
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது.
அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சுசீந்திரன், " விஜய் ஆண்டனி சாரின் 25-வது படம் சக்தித் திருமகன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஜய் ஆண்டனி சாரின் சாம்ராஜ்யத்தில் அவர் ராஜா மட்டும் இல்ல. அவர் ஒரு வேலைக்காரரும் கூட. ஏன்னென்றால் எல்லா விதமான வேலைகளையும் அவர் ஒருத்தர் மட்டுமே எடுத்து செய்துகொண்டிருக்கிறார்.
அதனால் வேலை செய்யக்கூடியவர்களின் வலி அவருக்கு தெரியும். அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனி சாரை நினைத்துப் பெருமைக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் புதிய இயக்குநர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புக் கொடுக்கிறார்.
நல்லக் கதை இருந்தால் விஜய் ஆண்டனி சாரின் அலுவலகக் கதவு எப்போதும் திறந்திருக்கும்.
அவருக்கு வெற்றிகள் குவிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அந்தக் காலகட்டத்தில் 100-வது திரைப்படமும், 100-நாள் படம் ஓடுவதும் ஒரு நடிகருக்கு மைல் கல்லாக இருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் 25 நாள் படம் ஓடினாலே ப்ளாக் பஸ்ட்டர் என்கிறார்கள்.
விஜய் ஆண்டனி சாரின் இந்த 25-வது திரைப்படம் என்பது 100-வது படத்திற்கான உழைப்பு மாதிரிதான்.
நிறைய பேருக்கு அவர்களது 25-வது திரைப்படம் ஓடாமல் போய் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் சாருக்கு அவரது 25-வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

அதேபோல விஜய் ஆண்டனி சாருக்கும் அவரது 25-வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்.
வெற்றி தோல்வி என பல விஷயங்கைளை அவரது வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவரது வாழ்க்கை பயணம் என்னை போன்ற நபர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது.
அவரைப் பார்க்கும்போது ஒரு எனர்ஜி கிடைக்கும். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். ஆனால் யாரும் உழைப்பை மட்டும் விடக் கூடாது.
விஜய் ஆண்டனி சாரின் இந்த மேடைக்கு அவரது உழைப்பும் ஒரு காரணம்தான்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...