செய்திகள் :

Shakthi Thirumagan: ``விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்ததே என் கணவர்தான்" - நடிகர் விஜய் அம்மா சோபனா

post image

தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

சக்தி திருமகன்
சக்தி திருமகன்

இவரின் 25-வது படமாக சக்தித் திருமகன் படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அம்மா சோபனா கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``என் கணவர் மிகவும் ராசியானவர்.

விஜய் ஆண்டனியை 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்றப் பெயரை மாற்றி விஜய் ஆண்டனி எனப் பெயர் வைத்தவர் என் கணவர்தான்.

என் கணவரைப்போல விஜய் ஆண்டனியும் மிகவும் ராசியானவர். மியூசிக் டைரக்டராக சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருந்த அவருக்கு, திடீரென நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்தது.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

அதன் அடிப்படையில் திரைத்துறையில் தனக்கான ஒரு முத்திரையைப் பதித்து, 25வது படத்தையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி வித்தியாசமானவர். அவரைப்போலவே அவரின் கதைத் தேர்வும் வித்தியாசமாக, மிகவும் சிறப்பாக இருக்கிறது. நிச்சயமாக இதைவிட பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'4 நாள்கள் கோமாவில் இருந்தார்; அதன் பிறகுதான்'- விஜய் ஆண்டனி குறித்து ஆண்ட்ரூ லூயிஸ்

விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது.அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வத... மேலும் பார்க்க

'25 நாள் படம் ஓடினாலே ப்ளாக் பஸ்ட்டர்'னு சொல்றாங்க; விஜய் ஆண்டனி சாரின்...'- சுசீந்திரன் சொல்வதென்ன?

விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-... மேலும் பார்க்க

நூறுசாமி: ``பிச்சைக்காரனை விட அதிக உற்சாகம் கொடுக்கும்" - இயக்குநர் சசி கொடுத்த அப்டேட்

தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ... மேலும் பார்க்க

ஜப்பான் மொழியில் 'வேட்டையன்' ரிலீஸ்: "'முத்து'வின் வசூல் சாதனையைத் தாண்டும்" - பத்திரிகையாளர் சங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் படங்களுக்கு ஜப்பானில் தனி மவுசு. ரஜினியின் 'முத்து', 'தர்பார்' படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'வேட்டையன்' படமும் வசூல் மழை பொழிந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோப... மேலும் பார்க்க

திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷாலின் நன்றி வீடியோ

நடிகர் விஷால் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் விஷால் அறிமுகமான முதல் படம் செல்லமே. 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஷ... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ்த்தும் ஐசரி கணேஷ்

இந்தியக் குடியரசின் புதிய துணை குடியரசுத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் அரங்கில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அவரது தேர்வு... மேலும் பார்க்க