செய்திகள் :

திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷாலின் நன்றி வீடியோ

post image

நடிகர் விஷால் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் விஷால் அறிமுகமான முதல் படம் செல்லமே.

2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக ரீமா சென்னும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பரத்தும் நடித்திருந்தனர்.

படமும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படம் செப்டம்பர் 10, 2004 அன்று வெளியானது.

vishal
vishal

நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து 21 வருடங்கள் நிறைவடைவதையொட்டி தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``கடந்த 21 வருடமாக நான் மட்டுமல்ல என் குடும்பமும் மூன்று வேளை சாப்பிடும் நிம்மதியான உணவுக்கும், நானும் பலருக்கு உணவளிப்பதற்குமான உறுதி கொடுத்தது ரசிகர்களாகிய நீங்கள்தான்.

உங்களின் அன்பும் ஆதரவும் நம்பிக்கையும் தான் என்னுடைய திரைவாழ்க்கையில் 21 வருடத்தை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறேன்.

நான் நடித்த முதல் படம் செல்லமே வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் முடிந்திருக்கிறது. என் 31-வது படமாக மகுடம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

உதவி இயக்குநராக திரையுலகுக்கு வந்த என் பாதையை மாற்றிய என் குருநாதர் அர்ஜுன், ஃபாதர் ராஜநாயகம் என பலரும் ஊக்கப்படுத்தினார்கள்.

அதன்பிறகுதான் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பைக் கற்றேன். நன்றி என்ற ஒரு வார்த்தையில் என்னால் கடந்துவிட முடியாது.

Vishal & Sai Dhanshika
Vishal & Sai Dhanshika

என் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், விநியோகஸ்தர்கள், என்னுடன் நடித்த சக நடிகர்கள் என எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இதைத் தாண்டி நாம் எப்போதும் சொல்லும் கடவுளின் குழந்தைகளான என் ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.

பல சவாலான சூழல்களையும் கடந்து வருவதற்கு உங்களின் அன்பும், ஆதரவும், உங்களின் குரலும்தான் காரணம். முதல் படம் முதல் இப்போதுவரை விஷால் படம் என எனக்கான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.

அதுதான் என்னை சோர்வடையாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க உத்வேகம் கொடுக்கிறது. எனவே என் உணவுக்கு வழி காண்பித்த ரசிக தெய்வங்களுக்கு நன்றி.

இந்தப் பயணம் என்னுடைய வெற்றி அல்ல நம்முடைய வெற்றி. உங்கள் பணத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வில், கடந்த 12 வருடங்களாக என் அம்மா தேவி அறக்கட்டளை வழியே பலருக்கும் கல்வி, உணவு என உதவி வருகிறோம்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. உதவி பெறுபவர்கள் பெரியளவில் சாதித்து நிற்கும்போதுதான் மனம் நிறைவாக இருக்கும்.

நான் திசை மாறிப் போகும்பொழுது சரியாக வழிகாட்டிய பத்திரிகையாளர்களான என் ஆசிரியர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ்த்தும் ஐசரி கணேஷ்

இந்தியக் குடியரசின் புதிய துணை குடியரசுத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் அரங்கில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அவரது தேர்வு... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க" - மதராஸி படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி, திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மதராஸி. இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தி... மேலும் பார்க்க

Attagasam Rerelease: ருமேனியா விமான டயரில் கோளாறு; உயிர் பயத்தில் படக்குழு; பதறாத அஜித்; சரண் Rewind

அஜித்தின் படங்களில் ரொம்பவும் ஸ்பெஷல் 'அட்டகாசம்'. இரண்டு விதமான தோற்றங்களில் ஒரு தீபாவளிக்கு 'இந்த தீபாவளி 'தல' தீபாவளி' என்ற கேப்ஷனுடன் திரைக்கு வந்து வெற்றி கொடியை நாட்டியது. இயக்குநர் சரண் - இசையம... மேலும் பார்க்க