உச்ச நீதிமன்றத்தில் வேலை: தட்டச்சு, சுருக்கெழுத்தர் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 30 தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். F6/RC(CM) - 2025
பணி: Court Master
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.67,700
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் விண்ணப்பதாரரின் தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
எழுத்து மற்றும் நேர் முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரு.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1500. கட்டணத்தை யுகோ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.9.2025