செய்திகள் :

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!

post image

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்துவரும் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ். இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

தற்போது, கென் கருணாஸ் இயக்குநராக புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை அவரின் தந்தையும் நடிகருமான கருணாஸ் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: காந்தா தயாரிப்பு நிறுவனத்தின் திடீர் அறிக்கை!

reports suggests actor ken karunas new film titled as kadhalan

கூலி படத்தின் மோனிகா விடியோ பாடல் வெளியானது!

கூலி படத்தில் இடம் பெற்றிருந்த மோனிகா விடியோ பாடல் வெளியானது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர் கான், சத... மேலும் பார்க்க

1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைப் பேசும் காந்தாரா - 1!

நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் - 1 படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 199... மேலும் பார்க்க

ஆரோமலே அறிமுக விடியோ!

பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் மற்றும் நடிகர் கிஷன் தாஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “ஆரோமலே” திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களிடையே மிகவு... மேலும் பார்க்க

18/48: 2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள்!

ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இதுவரை 18 அணிகள் தேர்வாகியுள்ளன. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா தென் அமெரிக்க பிரிவில் முதல் அணியாக தேர்வாகி அசத்தியது. ஆசிய கண்டத்தில் இருக்கும் இந்திய அணி இதுவரை ஃபிஃபா உலகக் ... மேலும் பார்க்க

காந்தா தயாரிப்பு நிறுவனத்தின் திடீர் அறிக்கை!

நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்த... மேலும் பார்க்க

கமல் செயலால் கண் கலங்கிய ஊர்வசி!

சிறந்த நடிகைக்கான விருது வென்ற ஊர்வசி நடிகர் கமல் ஹாசனின் செயலால் கண் கலங்கினார்.தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி. கடந்த சில ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து பல... மேலும் பார்க்க