கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!
ஆரோமலே அறிமுக விடியோ!
பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் மற்றும் நடிகர் கிஷன் தாஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “ஆரோமலே” திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.
விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் ஹர்ஷத் கான். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் குட்டி டிராகன் எனும் கதாபாத்திரம் மூலம் நடிகராகத் தனி முத்திரைப் பதித்தார்.
”முதல் நீ முடிவும் நீ” போன்ற திரைப்படங்களில், நாயகனாக நடித்த கிஷன் தாஸ் உடன் இணைந்து ஆரோமலே எனும் புதிய திரைப்படத்திலும் தற்போது அவர் நடித்துள்ளார்.
இயக்குநர் சாரங் தியாகு இயக்கியுள்ள இந்தப் புதிய படத்தை, மினி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நடிகர் விடிவி கணேஷ் நடிகைகள் மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரது நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நகைச்சுவையான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக விடியோவை படக்குழுவினர், இன்று (செப்.11) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!