புரோ கபடி லீக் 2025: தமிழ் தலைவாஸை விட்டு வெளியேறிய பவன் செஹ்ராவத்!
ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
குவகாத்தியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Havildar
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ. உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. அகலம் இருக்க வேண்டும். பெண்கள் 152 செமீ உயரம், குறைந்தபட்சம் 48 கிலோ எடை இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 13.9.2025 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tax Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8,000 எழுத்துக்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளை யாட்டுத்தகுதி, சாதனைகள், உடற் தகுதி, மருத்துவத்தகுதி ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 2020-ஆம் ஆண்டிற்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மருத்துவத்தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வு மற்றும்
விளையாட்டுத்திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3-வது இடம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbic.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தகுதி, விளையாட்டுத்தகுதி போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக The Additional Commissioner(CCA Cell), O/o. The Principal Commissioner of CGST & Cen-tral Excise, Guwahati Commiss-ionerate, Room No. 113/112, 1st Floor, GST Bhawan, Kedar Road Fancy Bazan Guwahati - 781001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றஉ சேர கடைசி நாள்: 13.9. 2025