செய்திகள் :

கோயம்பேடு - அசோக் நகர் வழித்தடத்தில் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு!

post image

மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம்கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் சேவை அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்டப் பணிகள் காரணமாக, வருகிற செப். 15 முதல் 19 வரையிலான நாள்களில் கோயம்பேடு - அசோக் நகர் இடையில் காலை 5 மணிமுதல் 6 மணிவரையில் ரயில் சேவை இருக்காது.

மேலும், அதே ஒருமணி நேரத்தில் விமான நிலையம், செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல, சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில்களும் கோயம்பேடு வரையில் மட்டுமே இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த இடைப்பட்ட நேரத்தில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு - அசோக் நகர் இடையே 10 நிமிட இடைவெளியில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்தஒருமணி நேரத்தைத் தவிர்த்த மற்ற நேரங்களில் வழக்கமான ரயில் சேவையே இருக்கும்.

திருப்பூரில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த வீடு!

நாட்டின் குடியரசு துணைத் தலைவராகியிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் எளிமையான மனிதர் என்று கூறிய அவரது உறவினர்கள் அவர் பெற்றிருக்கும் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறுகிறார்கள்.திருப்பூரில், சி.பி. ர... மேலும் பார்க்க

மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிரு... மேலும் பார்க்க

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க