திருப்பூரில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த வீடு!
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 515 ஆர்ட்டிசன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த விருப்பமானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 04/2025
பணி: ARTISAN
மொத்த காலியிடங்கள்: 515
டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Machinist
காலியிடங்கள்: 104
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 176
பிரிவு: Welder
காலியிடங்கள்: 97
பிரிவு: Electrician
காலியிடங்கள்: 65
பிரிவு: Turner
காலியிடங்கள்: 51
பிரிவு: Electronic Mechanic
காலியிடங்கள்: 18
பிரிவு: Foundaryman
காலியிடங்கள்: 4
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்து தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,500 - 65,000
வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி உச்ச வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.400 செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.careers.bhel.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2025