நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்க்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!
ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது பயணம் மேற்கொண்டுவருகின்றார். இந்த நிலையில், இரு நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேபரலிக்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பச்சத் பவன் அரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட மூத்த எம்பி தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமேதி எம்பி கே.எல்.சர்மா மற்றும் மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் உள்பட பல்வேறு மக்கள் பிரநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
உன்சாஹர் எம்எல்ஏ மனோஜ் குமார் பாண்டே இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார். சமாஜவாடி கட்சியின் முன்னாள் தலைவரான பாண்டே, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதற்காகவும், மாநிலங்களவை தேர்தலில் பாஜகவை ஆதரித்தற்காகவும் கட்சியில் இடருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டே,
பிகாரில் பிரதமரின் தாயாரை அவமதித்ததைக் கண்டிக்குமாறு கோரி மக்களவைத் தலைவருக்கும், அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் எழுத்துப்பூர்வ முன்மொழிவை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐசியு படுக்கைகள் பற்றாக்குறையை ராகுல்காந்தி நிவர்த்தி செய்யவில்லை என்றும், எம்பியானதிலிருந்து காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றத்தில் ரேபரேலி பற்றி எத்தனை முறை பேசியுள்ளார் என்றும் பாண்டே விமர்சித்தார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும், 2024 முதல் ரேபரேலிக்கு அவர் செய்த பணிகளைப் பட்டியலிடவும் என்று அவர் கூறினார்.