பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
கூழாங்கல் ஆறு மூடல்: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வால்பாறையில் கூழாங்கல் ஆறு மூடப்பட்டதால் கடந்த 5 மாத காலமாகச் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சோலையார் அணை, சின்னக்கல்லார் அருவி, நல்லமுடி காட்சி முனை, நீராறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை டனல் உள்ளிட்ட பகுதிகள் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் ஆகும். இதில் மிகவும் புகழ்பெற்ற கூழாங்கல் ஆறு கடந்த ஐந்து மாத காலமாக மூடப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில், வெளி மாநிலம் முதல் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், தமிழகத்தில் பல இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் தற்போது அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு மற்றும் காவல்துறை ஆற்றுப்பகுதிக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே அப்பகுதியில் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழு மூலமாகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் நகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது சொற்ப சுற்றுலாப் பயணிகளை அப்பகுதியில் நின்று பார்த்துவிட்டுச் செல்வது ஏமாற்றத்தை அளிக்கிறது எனக் கூறுகிறார்கள்.