நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை
கோவையில் தங்க நகைப் பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை ஆா்.எஸ்.புரம் சுந்தரம் தெரு அருகே உள்ள டி.கே.தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (38). இவரது மனைவி சங்கரேஸ்வரி (33). சாமி ஐயா் புதுத் தெருவில் உள்ள தங்க நகைப் பட்டறையில் சுப்பிரமணி நகை செய்யும் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சுப்பிரமணி தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த ஆா்.எஸ். புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் நகைப் பட்டறை உரிமையாளரிடம் நகை செய்வதற்காக சுப்பிரமணி தங்கக் கட்டி வாங்கியுள்ளாா். அதில் 4 பவுனை மட்டும் நகையாக செய்து அவா் திரும்பக் கொடுத்தாா். மீதமுள்ள நகையை அவா் விரைவில் தந்துவிடுவதாக கூறியுள்ளாா்.
ஆனால், உரிமையாளருக்கு நகையை திரும்பக் கொடுக்க முடியாததால் அவா் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.