செய்திகள் :

கத்தார் தாக்குதல்: இஸ்ரேலை கண்டித்த இந்தியா - மன்னருடன் பேசிய பிறகு மோடி சொன்னது என்ன?

post image

நேற்றைய தினம் (செப்டம்பர் 9) கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த முன்னறிவிப்பில்லாத தாக்குதலை அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த தாக்குதல் முழுக்க முழுக்க நெதன்யாகுவின் முடிவால் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். எனினும், இதில் ட்ரம்ப் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த புவிசார் அரசியல் சூழலில் இந்தியா இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவில், "கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உடன் பேசினேன். தோஹாவில் நடந்த தாக்குதல்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தேன்.

சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறும் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. மோதலைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜாந்திர நடவடிக்கைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இந்தியா ஆதரவளிக்கிறது.

"இந்தியா, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு உறுதியாக ஆதரவளிக்கிறது. மேலும், அனைத்து வடிவங்களிலும் வெளிப்படும் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியாக நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலின் எந்தவொரு நடத்தையையும் கத்தார் பொருத்துக்கொள்ளாது எனக் கூறிய அந்த நாட்டு அரசு, மேலும்விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நட்புரீதியாக கத்தார் சென்றுள்ளார் அபுதாபியின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆயுதப்படை உச்சத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யான்.

கத்தார் மன்னருடன் மோடி

மேலும், துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் கத்தாருக்கு பயணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இத்துடன், ஜோர்தான் மற்றும் சவூதி அரேபியாவின் இளவரசர்களும் கத்தார் பயணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உப... மேலும் பார்க்க

``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தின... மேலும் பார்க்க

அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ - ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை - `சார்லி கிர்க்' யார்?

சார்லி கிர்க் - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 'அமெரிக்கன் கம்பேக் டூர்' (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு... மேலும் பார்க்க

பாமக: அன்புமணி நீக்கம்; "என்னை இரும்பு மனிதர் என்பார்; இன்று அந்த இரும்பே உருகிவிட்டது" - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸின் அதிரடி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க