ஓடிடியில் கூலி..! 4 மொழிகளில் ரிலீஸ்!
ரஜினி நடித்த கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் ஆமிர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ஃபகத் ஃபாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்த மோனிகா பெல்லூச்சி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற கூலி படம் தற்போது அமோசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.