செய்திகள் :

அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ - ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார்.

ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காததால் அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்

* அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் கட்சியில் இருந்து அவரை நீக்குகிறேன்.

* பாமக தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி.

ராமதாஸ்
ராமதாஸ்

* தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தை சொல்லைக்கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அதை அன்புமணி எதையும் மதிக்கவில்லை.

* அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது.

* நாம் ஒரு பயிரிட்டால் கண்டிப்பாக களை முளைக்கத்தான் செய்யும். ஆனால் களை முளைக்குமே என்று யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. தற்போது களையை நீக்கிவிட்டோம். வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்.

* தேவைப்பட்டால் அவர் தனிக் கட்சியைத் தொடங்கலாம். ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது.

* என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

அன்புமணி
அன்புமணி

* 16 குற்றச்சாட்டுகளில் என்னை உளவுபார்த்த குற்றச்சாட்டும் ஒன்று. அதுதான் நான் மிகவும் மனது வருந்திய குற்றச்சாட்டு. இந்த இடத்தில் வேவுபார்ப்பதற்கு என்ன இருக்கிறது.

* 46 ஆண்டுக் காலம் அரும்பாடுபட்டு வளர்த்த இந்தக் கட்சி அன்புமணியால் அழிகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்' - டிடிவி தினகரன்

மதுரை விமான நிலையத்துக்கு பெயர்மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. 'பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்' என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளை... மேலும் பார்க்க

சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உப... மேலும் பார்க்க

``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தின... மேலும் பார்க்க

US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை - `சார்லி கிர்க்' யார்?

சார்லி கிர்க் - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 'அமெரிக்கன் கம்பேக் டூர்' (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு... மேலும் பார்க்க